வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஸ்ரீவெள்ளேரியம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவம் கோலாகலமாக துவங்கியது.பாலாற்றின் வடகரையில், வெள்ளேரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆண்டுதோறும் ராஜவீதியில், நவராத்திரி உற்சவ திருவிழா நடைபெறும். இந்தாண்டு, 99வது நவராத்திரி உற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது.நாள்தோறும், வெள்ளேரியம்மன், பல்வேறு மலர் அலங்காரங்களில் எழுந்தருள உள்ளார். நிறைவு நாளையொட்டி, 24ம் தேதி, பார்வேட்டை உற்சவமும், மறுநாள், 25ம் தேதி, வீதி உலாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்துள்ளனர்.