பதிவு செய்த நாள்
28
அக்
2023
06:10
தமிழகத்தில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களில், டோக்கன் வழங்கும் நடைமுறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 764 கோவில்களில், மதியம் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தினம், ஒவ்வொரு கோவிலிலும், 30 - 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட எட்டு கோவில்களில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் பெறுவோருக்கான டோக்கன் நடைமுறையில், புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில், டோக்கன் நடைமுறை, கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. அறநிலைய துறை இணையதளத்தில், தினமும், காலை 11:00 மணிக்கு அந்தந்த கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு, கணினியில் பதிவிறக்கம் செய்து, டோக்கன்களை கட்டாயம், ஸ்கேன் செய்த பின், பக்தர்களுக்கு வழங்க வேண்டும். டோக்கனில், கோவில் பெயர், நாள், ரசீது எண், ரசீது வழங்கிய நேரம், அன்னதான டோக்கன் எண் மற்றும் ஸ்கேன் செய்ய வசதியாக, க்யூ.ஆர்., குறியீடு வசதி இடம்பெற்றிருக்கும் என்றனர். - நமது நிருபர் -