பதிவு செய்த நாள்
28
அக்
2023
06:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் வீதி உலா வரும் சண்டிகேஸ்வரர் ரதத்திற்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சக்கரம் செய்து பொருத்தும் பணி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும் நவ., 17 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, நவ., 23 ல் பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி ரதத்தில், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இந்நிலையில், சண்டிகேஸ்வரர் ரத்தின் முன்பக்க, 2 சக்கரமும் சேதாகி உள்ளதால், அதை, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோவில் ஆஸ்தான மர ஆச்சாரிகள், இலுப்பை மற்றும் காட்டுவா மரம் கொண்டு, புதிய சக்கரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.