தடத்துப் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2023 03:10
அவிநாசி: அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள தடத்து பிள்ளையார் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசி கவுண்டன் புதூர் பகுதி ராயன் கோவில் காலனியில் எழுந்தருளியுள்ள சக்தி கணபதி எனும் தடத்துப் பிள்ளையார் கோவிலில் நாளை (புதன்) மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. இதற்காக இன்று வாஸ்து சாந்தி பூஜை, நவக்கோள் வேள்வி, விநாயகர் வழிபாட்டுடன் முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நாளை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகளுடன், திருக்குடங்கள் உலா வருதல், ஸ்ரீ சக்தி கணபதி, முருகப்பெருமான்கோவில் கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காசி கவுண்டன் புதூர், ராயன் கோவில் காலனி திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.