சித்தர் சக்தி பீடத்தில் வேள்வி பூஜை; செவ்வாடை பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2023 11:11
விழுப்புரம்; விழுப்புரம் ஓம்சக்தி சித்தர் சக்தி பீடத்தில் 14ம் ஆண்டு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை 4:30 மணிக்கு வேள்வி பூஜை துவங்கியது. 5:15 மணிக்கு கலச அபிஷேகமும், யாக வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, மக்கள் நலம்பெறவும், மழை வேண்டியும் சிறப்பு வேள்வி நடந்தது. மூலவர் பராசக்தி அம்மன், சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான செவ்வாடை பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஓம்சக்தி சித்தர் பீட மாவட்டத்தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மேல்மருவத்தூர் சித்தர்பீட அலுவலர் காசி செட்டியார், சக்தி பீட தலைவர் சீதாராமன், பொருளாளர் சீதா, வேள்வி குழுவினர், நிர்வாகிகள் வேள்வி பூஜைகளை ஒருங்கிணைத்தனர்.