ராஜஸ்தானில் சிவன் கோவில் குளத்தில் குளித்தால் பாவ விமோசன சான்றிதழ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2023 11:11
பிரதாப்கர்; தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்களை போக்குவதற்காக கோவில் குளத்தில் குளித்தால், பாவ விமோசன சான்றிதழை வழங்குகிறது ராஜஸ்தானில் உள்ள ஒரு சிவன் கோவில்.
மகாதேவ் மந்திர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கோதமேஸ்வர் மகாதேவ் மந்திர் என்ற சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள குளத்தில் குளிப்பவர்களுக்கு பாவ விமோசனம் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளதாவது: மகரிஷி கவுதமர், தெரியாமல் ஒரு பசுவை கொன்ற பாவத்தை போக்க இந்த கோவிலில் உள்ள மந்தாகினி குளத்தில் குளித்தார். அவரது பாவம் நீங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த குளத்தில் குளித்தால் பாவம் நீங்கும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. இந்தக் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு முன்னர் மோசமாக இருந்தது. அதனால், கோவிலுக்கு சென்றதாக யாராவது கூறினால் நம்பாமல் இருந்தனர்.
12ரூபாய் கட்டணம்; இதைத் தொடர்ந்தே, பாவ விமோசன சான்றிதழ் வழங்கும் நடைமுறை துவங்கியது. தற்போது ஆண்டுக்கு, 300 பேர் வரைக்கும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக, 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசின் வருவாய் துறை அதிகாரி இந்த சான்றிதழை வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.