அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 11:11
கிளார், : காஞ்சிபுரம் அடுத்த, கிளாரில் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காஞ்சி மஹா பெரியவரால் பூஜிக்கப்பட்ட அறம்வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐந்தாம்ஆண்டு ஸம்வத்ஸாரபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவை ஒட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து சங்காபிஷேகமும், காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ைஞ, யாக சாலை பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடும் தொடர்ந்து வருஷாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு, ரிஷப வாகனத்தில், அறம்வளர் நாயகியுடன் அகத்தீஸ்வரர் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.