கோவிந்தவாடி : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஏரிக்கரை மீது, கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா கடந்த செப்., 19ம் தேதி சிவாச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து, தினசரி காலை 10:00 மணி அளவில், மண்டல பூஜை நடந்து வந்தன. இதையடுத்து, மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான நேற்று, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, மலர் அலங்காரத்தில், கன்னியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.