மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 12:11
திருவாலங்காடு,: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில், 30 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 2.5 அடி உயரம் கொண்ட 84 கிலோ எடையிலான பித்தளையிலான அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கிராம மக்கள் அம்மனை வழிபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் சிலையை திருடிச் சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.