ஓர் அடியானின் குழந்தை இறக்கும்போது இறைவன் தன் வானவர்களிடம் இவ்வாறு கேட்பான். ‘என் அடியானுடைய குழந்தையின் உயிரைக் கைப்பற்றிக் கொண்டீர்களா’ எனக் கேட்பான். அவர்கள் ‘ஆமாம்’ என்பர். பிறகு அவர்களிடம், ‘‘இதற்கு என் அடியான் என்ன கூறினான்’’ என வினவுவான். அவர்கள், ‘‘இந்த சோதனைக்காக உன்னைப் புகழ்ந்து, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்’ (நாம் இறைவனுக்கே உரியவர்கள். அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) என்று கூறினான்’’ என பதிலளிப்பர். அப்போது அவன், ‘‘என்னுடைய இந்த அடியானுக்காக சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள். அதற்கு ‘பைத்துல்ஹம்த் (நன்றி இல்லம்) என்று பெயர் சூட்டுங்கள்’’ என்று கூறுவான். இந்த அடியான் கூறியதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என் குழந்தை பறிபோனதற்கு உன்னை தவறாக நினைக்கவில்லை. நீ செய்வது அநீதியாக இருப்பதில்லை. உனக்கு உரிமையான பொருளை எடுத்துக்கொண்டால், அதற்காக நான் ஏன் அதிருப்தியாக வேண்டும்’ என்பதுதான் பொருள். இதில் உள்ள ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்பது பொறுமையைக் குறிக்கும் சொல்லாகும். இது மனிதனுக்கு பொறுமையை போதிக்கிறது. அவனது விருப்பத்திற்காகவே வாழ்வது மட்டுமே கடமையாக இருந்தால் பலன் கிடைக்கும்.