திருநெல்வேலி; நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் காமாட்சி அம்பாள் அவதார தினத்தை முன்னிட்டு காமாட்சி அம்பாளுக்கு 101 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஐப்பசி பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு காமாட்சி அம்பாளுக்கு பால் மற்றும் சகல விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்பாளுக்குரிய திரிசதி அர்ச்சனைகள் நடந்தது. கோவில்பட்டி விக்னேஷ் அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை செய்தார். பூஜையில் ஆடிட்டர்கள் சுந்தர்ராமன், ராமராஜன், கயிலை கண்ணன், தச்சை ராஜகோபால், பாலு, ராஜலெட்சுமி, சீதா, ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காஞ்சிமடம் கிளை மேலாளர் நாராயணன் செய்திருந்தார்.