இன்று ஏகாதசி விரதம்; பெருமாளுக்கு துளசி மாலை போதும் துன்பங்கள் பரந்தோடும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2023 10:11
ஏகாதசி பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள். ஏகாதசி விரதம் இருப்போர் அளவில்லா செல்வம், உயரிய நிலையை பெறலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும்.
விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். ஏகாதசியான இன்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட பாவம் தீரும்.. நிம்மதி கிடைக்கும்.