Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் ... தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை வீட்டில் தீபம் ஏற்றுங்க..! வருடம் முழுவதும் நல்லது நடக்கும்! தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கதை கேட்டு மதம் மாறிய முஸ்லிம் குடும்பம்; சனாதன தர்மத்தை பின்பற்றுவதாக நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
ராமர் கதை கேட்டு மதம் மாறிய முஸ்லிம் குடும்பம்; சனாதன தர்மத்தை பின்பற்றுவதாக நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

10 நவ
2023
12:11

சத்ரபதி சாம்பாஜிநகர், மஹாராஷ்டிராவில் கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முஸ்லிம் குடும்பம் ஒன்று ஹிந்து மதத்துக்கு மாறியது. மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் சத்ரபதி சாம்பாஜிநகர் உள்ளது. இங்குள்ள அயோத்தியா நகரி மைதானத்தில் கடவுள் ராமர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் ராமர் கதை என்ற பெயரில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்து சொல்லப்பட்டது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மஹாராஷ்டிரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மஹாராஷ்டிராவின் அஹமது நகரில் இருந்து பங்கேற்ற முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், ராமரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டபின் முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்துக்கு மாறினர். இதை, மத்திய பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் பீடத்தின் தலைவர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஹிந்து மதத்துக்கு மாற யாராவது வற்புறுத்தினரா? என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முஸ்லிம் குடும்பத்தின் தலைவர் ஜமீல் நிஜாம் ஷேக், குழந்தை பருவத்தில் இருந்தே சனாதன தர்மத்தை நான் பின்பற்றுகிறேன். என்னையும், என் குடும்பத்தாரையும் யாரும் மதம் மாற வற்புறுத்தவில்லை. நாங்கள் பல ஆண்டுகளாக ராமரையும், கிருஷ்ணரையும் வணங்கி வருகிறோம். விநாயகர் சதுர்த்தியும் நாங்கள் கொண்டாடுவோம், என்றார். “இந்த நிகழ்வுக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என, மத்திய இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar