பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2023 04:11
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது. அதனையொட்டி கடந்த 8ம் தேதி பவித்ர உற்சவம் துவங்கி 3ம் நாளான இன்று நடந்தது. இன்று காலை 7 மணியளவில் நித்திய ஹோமம் துவங்கியது. பின்னர் காலை 10.30 மணியளவில் மகாசாந்தி ஹோமமும், ஹோமம் மற்றும் குருநாசுதி நடந்தது. மதியம் 1 மணியளவில் கடம் புறப்பாடு, சாற்றுமுறை நடந்தது. மாலை பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவ ஐயங்கார், , சம்பத் ஐயங்கார், மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.