பதிவு செய்த நாள்
10
நவ
2023
05:11
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,50,408 வசூல் ஆனது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டாலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி ஒன்றரை மாதத்திற்கு பிறகு நடந்தது. அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரேவதி முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை திருக்கோவிலூர் செயல் அலுவலர் அருள் தலைமையில் உளுந்தூர்பேட்டை சரக ஆய்வாளர் செல்வராஜ், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் இணைந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1,50,408ம், 7 கிராம் 800 மில்லி பொன், 19 கிராம் வெள்ளி வசூல் ஆனது.