பதிவு செய்த நாள்
11
நவ
2023
09:11
காஞ்சிபுரம், காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன், காஞ்சிபுரம் சங்கர மடத்தில், உலக நன்மைக்காக 10,000 தாமரை மலர்களால் யாக பூஜை நேற்று நடந்தது.
இதில், 25க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்ற யாக பூஜையை, சங்கட மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் துவக்கி வைத்தார். ஸ்ரீமடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் முன்னிலை வகித்தார்.இதில், 10,000 தாமரை மலர்களை தேன், நெய், பசும்பாலில் மூழ்கி எடுத்து ஹோமத்தில் இட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது. வேத விற்பன்னர்களால், 1 லட்சம் முறை, ராமாதசாச்சாரி மந்திரம் சொல்லப்பட்டு யாக பூஜை நடந்தது.அதை தொடர்ந்து, அதிஷ்னாடனத்தில் மஹா பெரியவர் சுவாமிகளுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.