கந்த சஷ்டி விழா; காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 01:11
திருப்பூர் : கந்த சஷ்டி விழாவை ஒட்டி, திருப்பூர் முருகன் கோயில்களில் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர்.
கந்த சஷ்டி விழாவை ஒட்டி, திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்ரமணியர் கோவிலில், காப்பு கட்டி சஷ்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். விழாவை ஒட்டி, சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.