அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில், அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னூர், ஓதிமலை ரோடு, பெரியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, காலை அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. குலதெய்வ வழிபாட்டு குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன், கதவுகரை பகவதி அம்மன், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன், அன்னூர் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளிக்கு மறுநாள் என்பதால் அமாவாசை வழிபாட்டுக்கு வழக்கத்தை விட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.