திருக்கோவிலூர் கோவில்களில் கேதார கவுரி நோன்பு; பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 05:11
திருக்கோவிலூர்; திருக்கோவிலூரில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்து வழிபாடு நடத்தினர். நரகாசுரனை பகவான் வதம் செய்த நாளை தீபாவளியாக கொண்டாடினாலும், அன்றைய தினம் ஐஸ்வரியம் தரும் கேதார கவுரி விரதம் இருந்து பலரும் நோன்பு எடுத்தனர். அதேபோல் தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசையிலும் சிலர் நோன்பு எடுப்பர். அந்த வகையில் இன்று காலை முதல் விரதமிருந்த பக்தர்கள் திருக்கோவிலூரில் விரட்டானேஸ்வரர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களுக்கு சென்று கேதார கவுரியை வழிபட்டு நோன்பு எடுத்தனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.