திருப்பரங்குன்றம் கோயிலில் அணைந்தே இருக்கும் அணையா விளக்குகள்; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 05:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அணையா விளக்குகளை பராமரிப்பதற்கு நிர்வாகத்திற்கு ஆர்வமில்லை.
கோயில் ஆஸ்தான மண்டபம், கம்பத்தடி மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் 24 மணி நேரமும் சுடர்விடும் வகையில் அணையா விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த விளக்குகள் பல நாட்கள் அணைந்தே கிடக்கிறது. உள்துறை நிர்வாகத்திற்கு எப்போதாவது ஞாபகம் வந்தால் அந்த விளக்குகள் சுடர் விடும். இன்று கந்த சஷ்டி விழா துவங்கியது. திருவாட்சி மண்டபத்தில் இருந்த அணையா விளக்கு காலை 10:00 மணிக்கு மேல் ஏரியச் செய்தனர். மற்ற இரண்டு விளக்குகளும் அணைந்தே இருந்தது. கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் பொழுது மன நிம்மதியை தேடி வருகிறோம். அப்போது விளக்குகள் அணைந்து இருப்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சாதாரண நாட்களில் தான் அப்படி இருந்தது என்றாலும் இன்று முக்கியமான திருவிழா துவக்கம். இன்றும்இந்த விளக்குகள் அணைந்திருந்தது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. அணையா விளக்குகள் தொடர்ந்து எறிய துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.