வாரணாசியில் விஜயேந்திரர்; காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 11:11
வாரணாசி : வட மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசி விஸ்வநாதர், அன்னபூரணி கோவில்களில் பூஜை செய்து கங்கா ஆரத்தியிலும் பங்கேற்றார். தீபாவளியன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கோவில் டிரஸ்டிகள் வரவேற்றனர். அங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்த பின் அன்னபூரணி கோவிலுக்கு சென்றார். அங்கு ஸ்வர்ண அன்னபூரணி சன்னிதிக்கு சென்று வஸ்திரங்கள் வழங்கி அர்ச்சனை செய்தார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மாலை 5:00 மணிக்கு ஹனுமான் காட் பகுதிக்கு படகில் சென்று கங்கா ஆரத்தியில் கலந்து கொண்டார். அங்கு கங்கை நதியின் சிறப்பு குறித்து சுவாமிகள் பேசினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.