கந்த சஷ்டி 2ம் நாள்; திருச்செந்தூரில் வள்ளி தெய்வானையுடன் ஜெயந்திநாதர் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 02:11
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி இரண்டாம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கி வழிபட்டு வருகின்றனர். கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளான இன்று சண்முக விலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.