Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ராமாபாய்
ராமாபாய்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2012
12:18

கங்கை பாயும் காசிநகரத்தை  சந்தன் என்பவன் ஆட்சி செய்தான். மன்னனின் ஒரே மகள் ராமாபாய். இளமையிலேயே, அவளது மனம் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தது. திருமண வயதை அடைந்ததும், பக்கத்து நாட்டு இளவரசனுக்கு மணம் செய்து வைத்தான். அவன் அழகில் மன்மதன், ஆனால் குணத்தில்.... நற்குணம் என்பது சிறிதளவும் அவனிடம் இல்லை என்பது சிலநாட்களிலேயே தெரிந்து போனது. மதுவும் மங்கையும் தவிர அவனது சிந்தனையில் வேறு ஏதுமே இல்லை. ராமாபாய் கணவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொன்னாள். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு போல, பயனேதும் இல்லை. இதனிடையே, ராமாபாய் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இளவரசனின் தந்தையும் தன் மகன் குடியும் கூத்துமாகத் திரிவதைக் கண்டு மனம் வருந்தினார். மருமகள்  ராமாபாயை எண்ணி கண்ணீர் சிந்தினார். அவள் மனம் வருந்தும் சமயத்தில் எல்லாம், மருமகளே! என் சுயநலத்துக்காக உன் வாழ்வை அழித்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடு, என்று வேண்டி கொள்வார்.

அவளும், நல்ல குணம் கொண்ட இவருக்கு இப்படி ஒருதுஷ்டப்பிள்ளை வாய்த்து விட்டதே, என்று எண்ணிக் கொள்வாள். இனி, தன்னைக் காப்பாற்ற அந்த கிருஷ்ணனால் மட்டுமே முடியும் என்ற முடிவுக்கு வந்தாள். ஏகாதசி, கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணி ஆகிய நாட்களில் விரதம் இருக்கத் தொடங்கினாள். அரண்மனையில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தாள். பக்தி மிக்க பாகவதர்களை அரண்மனையில் பாடச் செய்தாள். இளவரசனோ, அவளது வழிபாடுகளை மதிக்காமல் மனைவி, பஜனைக் கோஷ்டியினரை ஏளனம் செய்தான்.  அதேநேரம் அவன் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், அந்தப் பாறைக்குள்ளும் சற்றுஈரம் இருக்கத்தான் செய்தது. இளவரசனுக்கு, தன் பிள்ளையிடம் மட்டும் பாசம்! ஒருநாள், பிள்ளையை மடியிலிட்டு கண்ணே! கண்மணியே! என்று கொஞ்சிக் கொண்டிருந்தான். இது தான் தருணம் என்று நினைத்த ராமாபாய், சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள். மது, மாதுவால் நாட்டை இழந்தவர்கள் எத்தனையோ பேர்!  நீங்கள் ஒன்றும் அறியாதவர் அல்ல. நம் குழந்தையின் எதிர்காலம் கருதியாவது உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றுங்கள்.

பாவம்! வயதான காலத்தில் மாமா அரச பாரத்தைச் சுமந்து கொண்டிருப்பது நியாயமா? மகன் நீங்கள் இருக்க, அவர் சிரமப்படுவது முறை தானா? நீங்களே பட்டம் சூட்டிக் கொண்டு ராஜ்ய பரி பாலனத்தை ஏற்க வேண்டியது தானே! என்று வார்த்தைகளை அடுக்கினாள். குழந்தையை கீழே போட்டுவிட்டு இளவரன், கோபத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டான். கொடுஞ்சொற்களால் மனைவியின் உள்ளத்தைக் காயப்படுத்தினான்.  நொந்து போன ராமாபாய், இனிமேல் இவருக்கு புத்திமதி சொல்லி பயனில்லை, என்று முடிவெடுத்து விட்டாள். ஒருமுறை, வைகுண்ட ஏகாதசி நன்னாள் வந்தது. வழக்கத்தை விட, விமரிசையாக விழா ஏற்பாடுகளைச் செய்தாள். அரண்மனை எங்கும் மாவிலைத் தோரணம் அலங்கரித்தது. வாசலில் மங்கலமாய் வாழையும், மஞ்சளும் அழகு சேர்த்தன. வீதியெங்கும் மாக்கோலம். சந்தனம், பன்னீரின் நறுமணம் காற்றில் கமழ்ந்தது. பூஜாமண்டபத்தின் தங்கமணி பீடத்தில் நடுநாயகமாய் கிருஷ்ண விக்ரஹத்தை எழுந்தருளச் செய்தாள். துளசிதீர்த்தம் மட்டும் பருகி, ராமாபாய் விரதத்தில் இருந்தாள். பாகவத கோஷ்டியினர் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மது அருந்திய நிலையில் அங்கு வந்த இளவரசன் ஆவேசமாகக் கத்தினான். 

ஏ ராமாபாய்! என்னடி! பஜனைக்காரர்களுடன் சேர்ந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறாய்! வெளியே சென்று வந்த கணவனை கவனிப்பதை விட்டுவிட்டு பூஜை, விரதம் என்று அலைகிறாயே! எனக்கு இப்போது ஆட்டு மாமிசம் வேண்டும். அதை சமைத்து தர ஏற்பாடு செய்யாவிட்டால் இங்கு என்ன நடக்குமென்று எனக்கே தெரியாது, என்றான்.  பூஜையை தடுத்து நிறுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன், அவன் வந்திருப்பதை ராமாபாய் புரிந்து கொண்டாள்.  சுவாமி! மாமிசம் உண்பது கொடிய பாவம். அதிலும், விரத நாளில் இப்படி கேட்பது நியாயமா? தெய்வநிந்தனைக்கு ஆளாகி விடுவீர்களே! , என்றாள்.  நிறுத்து உன் வேதாந்தத்தை! என்னிடம் கதை அளக்கிறாயா? நீ வணங்கும் இந்த ஹரியே, இரண்யனின் குடலைத் தின்றவன் தானே! அவன் மட்டும்  மாமிசம் சாப்பிடலாம்! நான்  சாப்பிடக் கூடாதோ! இப்போதே சமைக்க முடியுமா? முடியாதா?!, என்றான். ராமாபாய் கணவனின் காலில் விழுந்து அழுதாள். இன்று வைகுண்ட ஏகாதசி. ஒருநாள் மட்டும் பொறுங்கள். நாளையாவது ஏற்பாடு  செய்கிறேன், என்று கெஞ்சினாள்.  அவனது கல்நெஞ்சம் இரங்கவே இல்லை. என் சொல்லை மதிக்கத்தவறியவளே! என்ன செய்கிறேன், பார், என்றவன், பூஜா மண்டப வாசலுக்கு ஒரு ஆட்டை இழுத்து வந்து வெட்டிக் கொன்றான். 

இதைக் கண்ட ராமாபாய் கொதித்து எழுந்தாள்.  வாயில்லா ஜீவனைக் கொன்ற பாவம் உங்களை சும்மா விடாது. நம் குழந்தையை  வெட்டினால் உங்களால் தாங்க முடியுமா?, என்றாள். அப்போது, தூளியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வீல் என்று அலறியது. ராமாபாய் ஓடிச் சென்று பார்த்தாள். வாயில் நுரை தள்ளிய படி குழந்தை மயங்கிக் கிடந்தது. இதைக் கண்டு அவள் மயங்கி விழுந்தாள். இளவரசனும்  அதிர்ச்சியுடன் ஐயையோ! ஆட்டைக் கொன்ற பாவத்திற்காக, அநியாயமாக என் குழந்தை பலியாகி விட்டதே! இறைவனைத் தூசாக மதித்த எனக்கு இது நல்லபாடம், என புலம்பினான்.  உடனே பாகவதர்கள், பக்தி சிரத்தையோடு துளசி தீர்த்தத்தை குழந்தை மீது தெளித்தனர்.  என்ன அதிசயம்! குழந்தை கண்விழித்தது. இளவரசன், மனம் திருந்தினான். மனைவியின்  பக்தியை உணர்ந்தான். வாழ்நாள் முழுவதும் அத்தம்பதியர்   பக்தியுடன்வாழ்ந்து, கிருஷ்ணரதுதிருவடியை  அடைந்தனர்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.