கோவையில் ஒலித்த கோஷம்.. சபரிமலைக்கே கேட்கும்!; சித்தாபுதூரில் பக்தர்கள் விரதம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2023 11:11
கோவை; கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோயிலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று (17ம் தேதி) காலை கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, மாலை அணிந்தனர். கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.