பதிவு செய்த நாள்
17
நவ
2023
04:11
பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்திபெற்ற தேர்த் திருவிழாயொட்டி உள்ள ரத சங்கமம் நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
கேரளா, பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா 14ம் தேதி துவங்கியது. முதல் நாள் விழாவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சுப்பிரமணியர், விநாயகர் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தனர். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மந்தக்கரை மகா கணபதி கோயில் தேரோட்டம் நடந்தது. மூன்றாவது நாளான நேற்று காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலிலும், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோயிலிலும் ரத உற்சவம் நடந்தது. நேற்று இரவு, லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோயில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்கள், தேர்முட்டியில் சங்கமித்தன. வண்ண விளக்கொளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை, பரவசப்படுத்தியது. தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கும் உபதேவதைகளுக்கும் சிறப்பு பூஜைகளுடன், திருத்தேர் உற்சவம் நிறைவடைந்தது.