மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2023 03:11
கோவை ; கந்த சஷ்டியையொட்டி மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலித்தார்.
முருகனின் ஏழாம் படைவீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் தினசரி காலையும், மாலையும் யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், திருவீதியுலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து இன்று நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.