திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆட்கள் தேவை; தேவஸ்தானம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2023 05:11
திருப்பதி : திருப்பதி லட்டு உலக புகழ் பெற்றது. திருப்பதி பிரசாத லட்டு தயாரிக்க ஒப்பந்த ஊழியர்கள் தேவை என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்யும் தகுதியான நபர்கள் நிரந்தர வேலை வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதில் வைஷ்ணவர்களில் வைகனாசா ஆகமத்தை பின்பற்றும் தகுதியான நபர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தேவஸ்தானத்தில் இன்ஜினியர் பணிகளுக்கு 59 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.