Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆட்கள் ... பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்த்தஜாம பூஜையில் அனுமதிக்கவில்லை ; பக்தர்கள் புகார் பவானி சங்கமேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீக்ஷிதர் பரிபூரணமடைந்தார்; துறவியர்கள், வேத பண்டிதர்கள் மரியாதை
எழுத்தின் அளவு:
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீக்ஷிதர் பரிபூரணமடைந்தார்; துறவியர்கள், வேத பண்டிதர்கள் மரியாதை

பதிவு செய்த நாள்

23 நவ
2023
06:11

தஞ்சாவூர், சேங்காலிபுரம் வேத வித்துக்கள், அக்னி ஹோத்ரிகள், உபன்யாச கர்த்தாக்கள் நிரம்பி வாழ்ந்த ஊர் என்ற பெருமை உடையது. இவ்வூர் உபன்யாச சக்கரவர்த்தி என்ற புகழ்பெற்ற ஸ்ரீ அனந்தராம தீட்சுதர் பரம்பரையைச் சேர்ந்தவர் ராம தீட்சதர். பிரம்மஸ்ரீ ஸ்ரீதர் தீட்சிதர். கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான்  ஸ்தாபகர் விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

ராம தீட்சிதர் தனது உபன்யாசத்தின் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக நமது பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீக வரலாறுகள், பாகவதத்தின் பெருமைகள், ராமாயணம், மகாபாரதத்தின் வரலாற்று பெருமைகள், லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமைகள், இறைவனின் அவதார பெருமைகளை தேசத்தின் பல மாநிலங்களுக்குச் சென்று உபதேசித்து பக்தர்களுக்கு வழிகாட்டி வந்தார். காஞ்சி சங்கர மடம்,  சிருங்கேரி மடம் போன்ற பல மடங்களின் ஆச்சாரியார்கள் இவருக்கு உபன்யாஸக சக்ரவர்த்தி, பாரத ஸிம்ஹம் எனும் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளது. கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தானில் 90 வது வயதில் பரிபூரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மரபுப்படி மரியாதை செய்தனர்.


தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன், அ.தி.மு.க., முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, திருவிடைமருதுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் மாநகரத் தலைவர் வாசன் வெங்கட்ராமன், பொருளாளர் வேதம்முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளிட்ட பல மடங்கள் மற்றும் கோவில்களின் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் பலர் பங்கேற்று மரியாதை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar