Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... திருப்பதியில் பிரதமர் மோடி; 140 கோடி பாரத மக்களின் நலனுக்காக பிரார்த்தனை திருப்பதியில் பிரதமர் மோடி; 140 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,668 அடி உயர உச்சியில் மஹா தீபம்; விண்ணை முட்டிய கோஷம்.. 11 நாட்கள் தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
2,668 அடி உயர உச்சியில் மஹா தீபம்; விண்ணை முட்டிய கோஷம்.. 11 நாட்கள் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

27 நவ
2023
08:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன், பல லட்சணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது.  நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது.  பின் ‘ஏகன் அனேகன்’ என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் (பெரிய அகல் விளக்கு) நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை கொண்டு, 5 மடக்குகளில் தீபமேற்றி, அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாக பிரம்ம தீர்த்தத்தில், பஞ்ச மூர்த்தி உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் தனித்தனி தங்க விமானத்தில்  பஞ்ச மூர்த்திகளும், மூன்றாம் பிரகார தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி, 2,668 அடி உயர  மலையை நோக்கி, பார்த்தவாறு வைக்கப்பட்டது. பின், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் தன் இடபாகத்தை அளித்ததை நினைவு கூறும் வகையில், இரண்டாம் பிரகாரத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டு, மூன்றாம் பிரகார தங்கக்கொடி மரத்தின் முன், மலையை நோக்கியவாறு  மாலை, 5:59 மணிக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் கொடிமரம் எதிரில் அகண்ட தீபத்தில், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்ற, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழங்கிய கோஷம், விண்ணை முட்டியது. பக்தர்களுக்கு இரு நிமிடம் மட்டுமே காட்சியளித்த அர்த்தநாரீஸ்வரர், இரண்டாம் பிரகார ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றார். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா வந்தனர். அதேசமயம் திருவண்ணாமலையில் குவிந்த, பல லட்சக்கணக்கான பக்தர்கள், மஹா தீபத்தை தரிசித்து கிரிவலம் சென்றனர். மலை உச்சியில், 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரையில் உள்ள மக்கள் பார்க்க முடியும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar