பதிவு செய்த நாள்
04
டிச
2023
03:12
கூடலூர்: கூடலூர் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும், பக்தர்களுக்காக, இரும்புபாலம் விநாயகர் கோவிலில் ஐயப்ப சேவா சங்கம் சார்பிப் அன்னதானம் திட்டம் துவங்கி நடந்து வருகிறது.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வருகின்றனர். நீலகிரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் கூடலூர், குருவாயூர் கடந்த ஆண்டு முதல் கோழிக்கோடு சாலை வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்காக, நீலகிரி ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கடந்த ஆண்டு முதல், கூடலூர் கோழிக்கோடு சாலை இரும்புபாலத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அன்னதானம் திட்டம் துவங்கிய செயல்படுத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான இத்திட்டம் கடந்த வாரம் தூங்கி நடந்து வருகிறது. இங்கு பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்குவதுடன், தங்கி செல்லும் வசதியும் செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணித்து வரும் வெளிமாநில பக்தர்களுக்கு, இந்த வசதி பயனுள்ளதாக அமைந்துள்ளது. சேவா சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஏராளமான பக்தர்கள், உதவியாளர்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர்கள் உதவியுடன் இரண்டாவது ஆண்டாக இத்திட்டம் துவங்கி செயல்பட்டு வருகிறது என, கூறினர்.