Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கார்த்திகை அமாவாசை; வீட்டில் ... கார்த்திகை அமாவாசையில் கிணற்றில் பொங்கிய கங்கை நீர்; புனித நீராடி பக்தர்கள் பரவச தரிசனம் கார்த்திகை அமாவாசையில் கிணற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோயிலில் சோமவார விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோயிலில் சோமவார விழா

பதிவு செய்த நாள்

12 டிச
2023
11:12

தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டையில் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடந்தப்படும். மற்ற கோவில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோவிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபட்டனர். சோமவார திருநாள்களில் மரத்தின் இலைகளை பக்தர்கள் பறித்து செல்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டு கடந்த நவம்பர் 20ம் தேதி முதல் சோமவார திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 11 ம் தேதி, நள்ளிரவு 12 மணிக்கு கடைசி சோமவார தினத்தில் விசேஷ பூஜைகள் செய்து, தீபராதனைகள் காண்பிக்கப்பட்டு பிறகு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. வருடத்தில் ஒருநாள் பொங்கல் பண்டிகைய அன்று மட்டும் பகலில் நடை திறந்திருக்கும். விழாவிற்கு தஞ்சை, நாகை, திருவாரூர்,மதுரை போன்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் காலை முதல் இரவு வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தியும் பொதுஆவுடையாரை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar