இன்று கார்த்திகை அமாவாசை; வீட்டில் குலதெய்வத்தை வழிபடுங்க..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2023 07:12
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். இன்று செய்யும் வழிபாடு குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். புனிதத்தலங்களில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். வீட்டில் குலதெய்வத்தை வழிபட செல்வச்செழிப்புடன் வாழலாம்.