பதிவு செய்த நாள்
12
டிச
2023
12:12
திருச்சி, இன்று இரவு வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்க இருக்கும் நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆந்திர பக்தர் மீது கோவில் பாதுகாவலர் தாக்கியதால் நடை அடைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இன்று காலையில் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். கோவிந்தா முழக்கமிட்டபடி சென்ற பக்தர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் பாதுகாப்பு ஊழியர்கள், கோஷம் போடாமல் தரிசனம் செய்ய வேண்டும் என கூறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாதுகாப்பு ஊழியர்கள் சேர்ந்து அய்யப்ப பக்தர்களை தாக்கியதில் ஒரு பக்தர் பலத்த காயமடைந்துள்ளார். இதற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசு இந்து கோவில்களில் இருக்க வேண்டியதில்லை எனவும் குறிபிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா பக்தர் மீதான தாக்குதலை கண்டித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்த நிலையில், ஆந்திரா பக்தர்கள் தான் கோவில் பணியாளரை தாக்கியதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.