Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் முதல்முறையாக பிரம்மாண்ட ... சபரிமலையில் கடும் கூட்டம்: கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம்! சபரிமலையில் கடும் கூட்டம்: கேரள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் நாச்சியார்கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணம் நாச்சியார்கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

16 டிச
2023
04:12

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேச தலங்களில் 20வது தலமாகவும். முக்தி தரும் 12 கோவில்களில் 11வது தலமாகவும் போற்றப்படுகிறது.

புகழ்பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத் திருவிழாவும், பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  இதையடுத்து இன்று (16ம் தேதி) வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கொடிமரத்திற்கு முன்பு எழுந்தளிருனர். தொடர்ந்து கொடிமரத்திற்கு புனித கலச துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலை சூரிய பிரபையில் சுவாமி வீதியுலாவும் நடை பெறுகிறது. தொடர்ந்து நாளை (டிச.17) முதல் டிச.26ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை டிச. 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை பெருமாள்-தாயார் வீதியுலாவும், மாலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் பெருமாள் தாயார் வாகன மண்டபத்தில் எழுந்தருளலும், தொடர்ந்து, கல்கருட சேவையும் நடைபெறும். அப்போது, கல்கருட வாகனத் தில் பெருமாளை சந்நிதியிலிருந்து முதலில் 4 பேர், தொடர்ந்து 8 பேர். பின்னர் 16 பேர், 32 பேர், 64 பேர் எனக் கூடிக்கொண்டே இறுதியில் 100-க்கும் மேற்பட்டோர் தூக்கிச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கருட வாகளததின எடையும் அதிக ரித்துக் கொண்டே இருக்கும். அப்போது. கல்கருட பகவானை ஏராளமானோர் தரிசனம் செய்வர். பின்னர், இரவில் சினிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லி தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருள ஓலைச் சப்பர வீதியுலா நடைபெறும். டிச.24ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் வசந்த மண்டபத்தில் பெருமாள், தாயார் நிலைத் தெப்பமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar