சங்கடம் தீர்ப்பாய் சனீஸ்வரா; திருநள்ளாரில் குவிந்த பக்தர்கள்.. சிறப்பு அலங்காரத்தில் மூலவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2023 10:12
காரைக்கால் ; உலக பிரசித்தி பெற்ற காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார் சனி பகவான். 2026 மார்ச் 6வரை கும்ப ராசியில் தங்கியிருப்பார். சனி தோஷம் நீக்கும் தலமான இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மூலவர், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.