டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்; பல தலைமுறையாக நடக்கும் ஆச்சர்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2023 12:12
லக்னோ: மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ளது பட்லியா கிராமம். இப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக வெள்ளை கல் உருண்டைகளை குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். இவ்வாறு வழிபடுவதால் கால்நடை பிரச்சனை, கஷ்டங்களில் இருந்து விடுபடுவதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில், அந்த கல் உருண்டைகள் அனைத்தும் டைனோசர் முட்டைகள் என்று, லக்னோவின் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக 1877 ஆம் ஆண்டு டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், மத்தியபிரதேச மக்கள் அவற்றை குலத்தெய்வமாக வழிபட்டு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.