Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 55 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ... தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
14 அடி உயர கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
14 அடி உயர கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

23 டிச
2023
09:12

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில்  செர்க்கவாசல் திறப்பு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த கோயில் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி கொடுத்த இடமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த கோயிலில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பதால் இவ்வூர் கோடிஹத்தி பாப விமோசன தலம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோழிகுத்தி என தற்போது அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி பரமபத வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மூலவர் வானமுட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar