55 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்; லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 08:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகையில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் கோதண்ட ராம அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, சொர்க்கவாசல் வழியாக அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகையில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. ராகு தோஷ நிவர்த்தி மற்றும் மாங்கல்ய பாக்கியம் அளிக்கும் இத்தலத்தில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. பெருமாள் கோதண்ட ராம அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாளுக்கு தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.