ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. இராப்பத்து ஒன்றாம் திருநாளில் ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் ரத்தினங்கியில் நம்பெருமாள் சேவை சாதித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.