பதிவு செய்த நாள்
24
டிச
2023
09:12
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் ,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.