நாமக்கல்: நரசிம்மர் கோவிலில் உள்ள லட்சுமி நாராயணன் ஸ்வாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், லட்சுமி நாராயண ஸ்வாமிக்கு, நேற்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.காலை, 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, எம்.ஆர்.வி.,யின் இன்னிசை கச்சேரி நடந்தது.ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் செய்தனர்.