நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. இதில் திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். மார்கழி மாத திருவாதிரை நாளில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அதிகாலையில் சிவாலயம் சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். விரதகாலத்தில், சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை ஆகிய பஞ்சநடராஜர் தலங்களில் எங்காவது ஓரிடத்திற்கு சென்று வரலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் நன்மை தரும் என்று உபதேச காண்டச் செய்யுள் விளக்குகிறது. இவ்விரதத்தை முருகப்பெருமான் மேற்கொண்டு சிவபெருமானின் அருள்பெற்றார். வியாக்ரபாதர் விரதமிருந்து உபமன்யுவைப் பிள்ளையாகப் பெறும் பேறு பெற்றார். விபுலன் என்னும் அந்தணர், இவ்விரத பயனால் நடராஜப்பெருமானின் திருவடியில் நீங்கா இடம் பிடித்தார். விரதநாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.