உலகின் முதல் சிவாலயம்..!; உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் காப்பு களையப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 11:12
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று டிச.,26 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தன காப்பு படி களைதல் நடக்கிறது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இக்கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றதாகும். மங்களநாதர் சன்னதி அருகே வடக்கு முகமாக வீற்றிருக்கும் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒரு முறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராஜரின் சந்தனம் படி களைதல் நடக்கும். கடந்த டிச., 18 அன்று மாலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மரகத நடராஜர் தனி சன்னதியில் இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி எடுத்து வருகின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.