ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 09:12
போடி; திருமலை திருப்பதியில் ஒரு நாள் திருவிழா நடப்பது போல போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
திருப்பதியில் காலை நடை திறப்பு முதல் இரவு நடை சாத்தும் வரை நடக்கும் திருக்கல்யாணம் பூஜைகளை போல போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஒரு நாள் உற்சவ திருவிழா இன்று நடந்தது. அதிகாலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, திருப்பாவை. மகா தீபாரதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் துவங்கி சிறப்பு பூஜை, அலங்காரம், ஊஞ்சல் சேவை, அபிஷேகம் நடந்தன. பூஜைகளுக்கு பின்பு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், சீர்வரிசை, மணமகன் வரவேற்பு, பாலும் பழம் கொடுத்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாரிமுத்து செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.