சிதம்பரம் ஆருத்ரா தரிசன தேரோட்டம்; அலைமோதிய பக்தர்கள்.. இது வரை காணாத கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 11:12
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வா வா நடராஜா வந்துவிடு நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வா வா நடராஜா வந்துவிடு நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, சமயத்தில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு கோவிலுக்கு செல்வது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் மாலையிடுவது போன்ற காரணங்களால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
அதே சமயம் பள்ளி விடுமுறை என்பதால் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதிக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு பணிக்காக எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் கக், தலைமை, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் முன்னிலையில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள் வளாகத்தில் 20 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.