சுசீந்திரம் தாணுமாலையர் கோயிலில் மார்கழி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 11:12
நாகர்கோவில்; சுசீந்திரம் தனுமாலிய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக காட்சி தரும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 18-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் காலையில் மாலையிலும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியை நடைபெற்றது. 20ம் தேதி மூன்றாம் நாள் இரவு 11:30க்குமக்கள்மார் சந்திப்பு நடைபெற்றது. 22ம் தேதி ஐந்தாம் ஐந்தாம் நாள் அதிகாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் 6:00 க்கு உற்சவமூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும் நடைபெற்றது. 24ம் தேதி ஏழாம் நாள் இரவு கைலாச பறவை தரிசனம் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று காலை 8.30 க்கு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறுகிறது. நாளை ஆருத்ரா தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.