ஸ்ரீவைகுண்டம் கோவிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக செய்ய உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2023 10:12
தூத்துக்குடி ; ஸ்ரீ வைகுண்டம் (நவதிருப்பதி தலங்களில் முதன்மையானது) கள்ளர் பிரான் கோவிலில் வெள்ளப்பாதிப்பை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதை செய்து கொடுக்க சொல்லி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியிடம் கண்டிப்பான குரலில் உத்தரவு கூறினார். அப்படி செய்து கொடுக்கவில்லையென்றால் நானே ஒரு மாதம் கழித்து நேரில் வந்து செய்வேன் என்று கூறினார். பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் குறிப்பிட்ட அந்த பக்தரிடம் எவ்வளவு செலவாகும் என்று கேட்க, நிர்மலா சீதாராமன் நீங்கள் ஏன் செலவு செய்கிறீர்கள் உண்டியல் பணமிருக்கு என்றார். அப்படி செய்யவில்லை என்றால் CSR Fund மூலம் செய்து தருகிறேன் என்று பக்தரிடம் கூறினார்.