அக்.24 விஜயதசமி திருநாள். இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வழிபடவேண்டும். கல்வி, கலை பயிலத் துவங்க நல்ல நாள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணைக் கச்சேரி நடக்கிறது. அருளாளர்கள் இறைவனை நாத வடிவமாகப் போற்றுவர். தேவாரம் இறைவன்,ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பதாகப் போற்றுகிறது. பிறைநிலா வளர்வது போல கலையும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கலைமகள் சரஸ்வதியும் இடைவிடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறாள் என்பதன் குறியீடே வீணையாகிய இசைக்கருவி. இறையருளைப் பெறும் சாதனமாக இசை இருக்கவேண்டும். பொழுதுபோக்கு என்பது கலையின் இரண்டாவது அம்சம் தான். இசையாலே இறைவனை ஆராதிக்கும் வைபவமாக 108 வீணை வழிபாடு நடக்கிறது.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல் தூவ வேண்டிய மலர்கள்: தாமரை, மரிக்கொழுந்து
பாட வேண்டிய பாடல்: தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்மதி வானவர்தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.