பிறந்தது புத்தாண்டு 2024: தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு.. நள்ளிரவு நடைபெற்ற ஐயப்ப பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 01:01
2023ம் வருடம் முடிந்து 2024 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், இளைஞிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். 2024 புத்தாண்டை வரவேற்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோவிலிலும் வழிபட்டனர். இதைத்தவிர நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள், ரிசார்ட்களிலும் மக்கள் ஒன்றகாக கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.
கோவை ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் 73 வது பூஜா மஹோத்ஸவம் கடந்த வாரம் முதல் ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கத்தில் நடந்து வருகிறது. இதன் நிறைவு நாளான டிசம்பர் 31-ம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு 2024பிறந்ததையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்குசிறப்பு ஐயப்பனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசித்தனர்.