காரைக்கால்; காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் உலக நன்மை வேண்டி மீனவ பெண்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்கால் மேடு கிராமத்தில் உள்ள 54 கிராமங்களுக்கு பொது கிராமம் காரைக்கால் மேடு உள்ளது. மீனவமக்கள் நலன்கருதி ஆண்டு தோறும் சித்தி விநாயகர் ரேணுகா தேவி, பால ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மை வேண்டியும் இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று ஏராளமான மீனவ பெண்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள், ரேணுகா தேவி அம்மன் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.